வியட்நாமின் தெற்கே விமானம் ஒன்றின் உடைந்த பாகங்கள் மிதப்பது போன்ற செயற்கைக்கோள் புகைப்படங்களை சீனா வெளியிட்டுள்ளது. இது காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சீன விமானப் போக்குவரத்து துறையின் தலைவர் கூறுகையில், வியட்நாமின் தெற்கே புகை மண்டலம் போன்ற காட்சிகளும், விமானத்தின் பாகங்கள் கடலில் மிதக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளதாகக் கூறினார். எனினும், இது காணாமல் போன விமானத்தின் பாகங்களா என்பது உறுதிப் படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். மலேசிய விமானம் காணாமல் போகும் முன்னர் அதன் பாதையில் இருந்து விலகி திரும்பி மலாக்கா நீரிணைப் பகுதியில் காணாமல் போகியிருக்கலாம் என மலேசிய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதால், சீனா அதிருப்தி அடைந்துள்ளது. விமானம் பற்றிய உண்மையான தகவல்கள் அனைத்தையும் தெரிவிக்கும் படி மலேசிய அரசை சீனா கேட்டுக் கொண்டிருக்கிறது. மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் 150க்கும் மேற்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்நாடு மிகுந்த கவலை கொண்டுள்ளது.
இதனிடையே பினாங்கின் வடமேற்கே மலாக்கா நீரிணைப் பகுதியில் கிடைத்துள்ள சிறு பாகம், காணாமல் போன விமானத்தின் பகுதியாக இருக்கலாம் என மலேசிய விமானப் படைத் தளபதி ரோட்செய்ல் தவுத் தெரிவித்துள்ளார். தற்போது அந்த விமானத்தை தேடும் பணியில் 42 கப்பல்களும், 39 போர் விமானங்களும் ஈடுபட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment