பாரதிய ஜனதா மீது அதிருப்தியில் இருந்த சிவசேனா கட்சிச் தலைவர் உத்தவ் தாக்ரேவை நரேந்திர மோடி சமாதானப்படுத்தியுள்ளார். உத்தவ் தாக்ரேவை தொலைபேசியில் தொடர்புகொண்ட நரேந்திர மோடி, சிவசேனா கட்சி பாரதிய ஜனதாவின் நீண்டகாலத் தோழமைக் கட்சி என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ் தாக்ரேவை பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் சில நாட்களுக்கு முன்பு சந்தித்தனர். இதையடுத்து மோடி பிரதமராவதற்கு ஆதரவு அளிப்பதாக ராஜ்தாக்ரே தெரிவித்தார்.
இதற்கு பாரதிய ஜனதா வரவேற்பு தெரிவித்ததால் அதிருப்தியடைந்த உத்தவ் தாக்ரே, கூட்டணியில் சிவசேனா குறித்த உறவு பற்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில் பாரதிய ஜனதா தலைவர்கள் உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து நரேந்திர மோடியும் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி சமாதானம் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment