Home » » இலங்கை-தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தை:நாளை நடைபெறுமா?

இலங்கை-தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தை:நாளை நடைபெறுமா?

Written By Unknown on Wednesday 12 March 2014 | 13:38






இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில் இருதரப்பு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை கொழும்பில் நாளை நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
பாக் ஜலசந்தி உள்ளிட்ட மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக -இலங்கை மீனவர்களுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் இருதரப்பு மீனவ பிரதிநிதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை கொழும்புவில் நாளை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால் தமிழக மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.






Having been in the custody of the Sri Lankan fishermen fishing representatives of bilateral talks would take place in Colombo tomorrow casting doubt . TN fishing areas and fishing in the Palk Strait - between the Sri Lankan fishermen have long been a problem . The remedy January 27 - in Chennai on bilateral talks held between representatives of the fishermen . Following this, it was decided to hold further talks tomorrow in Colombo . But fishermen have been seized following the Sri Lankan Navy . The Chief Minister expressed serious dissatisfaction , fishermen freed from prison , wrote to the Prime Minister to take action . But fishermen negotiations take place is yet to be released tomorrow or casting doubt as to put it away .

0 comments:

Post a Comment

Share This

Powered by Blogger.

Labels