சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் பலியாகி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸை சேர்ந்த 30 பேர், மாநில போலீஸார் 14 பேர் என மொத்தம் 44 பேர் இணைந்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, வெடி குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான மாவோயிஸ்டுகள் தாக்குதலை நடத்தி உள்ளனர்.
டோங்கபால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, கூடுதல் படைகளுடன் ஜக்தால்புர் மற்றும் ராய்ப்பூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
இரு தரப்பினருக்கும் இடையே காலை 10.30 மணி முதல் தொடர்ந்து சண்டை நீடித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2010ம் ஆண்டு 76 போலீஸார் கொல்லப்பட்ட இடத்தில் தான் தற்போதும் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment