தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில், தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என கூறிய அவர், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பாரம்பரிய வாக்குவங்கிகளை காங்கிரஸ் கட்சி கொண்டிருப்பதாகவும், கடந்த கால தேர்தல்களில் கணிசமான வாக்குகளை பெற்றிருப்பதாகவும் வாசன் குறிப்பிட்டார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரசுக்கு வாக்குகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ள அவர், நியாயமான முறையில் தமிழகத்தில் கூட்டணிகள் அமையவில்லை என விமர்சித்தார்.
இதனால் காங்கிரஸ் கட்சி நீண்ட காலத்திற்குப் பிறகு தனித்துப் போட்டியிட நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் வாசன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment