மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை திரிணாமூல் காங்கிரஸ் ஆதரிக்காது என அக்கட்சித் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தவறான கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டிருப்பதாக குறை கூறினார். குஜராத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக கூறிய மம்தா, அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை மதவாதி என்றும் விமர்சித்தார்.
சில நாட்களுக்கு முன் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்த சமூக சேவகர் அன்னா ஹசாரே, இந்த கூட்டத்தில் பங்கேற்வில்லை. ஆனால் இக்கூட்டத்தில் ஹசாரே கலந்துகொள்ள ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. உடல்நிலை குறைவால் பங்கேற்க முடியவில்லை என ஹசாரே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் அதிக மக்கள் பங்கேற்காததும், ஹசாரே கலந்துகொள்ளாததும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
0 comments:
Post a Comment