முன்னாள் மத்திய அமைச்சரும், அண்மையில் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவருமான மு.க.அழகிரி பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அழகிரியுடன் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் உடனிருந்தார். அப்போது, மதுரை விமான நிலையத்திற்கு, முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்ததாகவும் இதுகுறித்து பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்ததாகவும் மு.க. அழகிரி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. பிரிந்து சென்றது குறித்து பிரதமர் தம்மிடம் வருத்தம் தெரிவித்ததாக மு.க்.அழகிரி கூறினார்.
தனிக் கட்சி தொடங்குவது பற்றி ஆதரவாளர்களுடன் ஆலோசித்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு முடிவை அறிவிப்பதாகவும் மு.க.அழகிரி தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகியுள்ள நிலையில், திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி பிரதமரைச் சந்தித்திருப்பது, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
0 comments:
Post a Comment