நாட்டில் நரேந்திர மோடி அலை எதுவும் வீசவில்லை என்று ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மும்பையில் பேசிய கெஜ்ரிவால், குஜராத்தில் மோடியின் ஆட்சியில் 60 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக விமர்சித்தார். அம்மாநிலத்தில் 800 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார். மத்தியில் காங்கிரசை அகற்றிவிட்டு பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த மக்கள் விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அர்விந்த் கெஜ்ரிவால் மும்பையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். மும்பைக்கு விமானம் மூலம் வந்த அவர், அங்கிருந்து ஆட்டோவில் ரயில் நிலையத்திற்கு சென்றார். இதனால் சாலையில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆட்டோவில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மூவருக்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்றதால் அதன் ஓட்டுநருக்கு மும்பை போலீசார் அபராதம் விதித்தனர்.
0 comments:
Post a Comment