சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலை கண்டிக்கும் விதமாக நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அம்மாநில காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் கேட்டுக்கொண்டுள்ளார். பாதுகாப்புப் படையினரையும், பொதுமக்களையும் மாவோயிஸ்ட்டுகள் கொடூரமான முறையில் கொன்று குவிப்பதாகத் பூபேஷ் தெரிவித்துள்ளார். எனினும், பாரதிய ஜனதா தலைமையிலான மாநில அரசு, இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பூபேஷ் பெகெல் குற்றம் சாட்டியுள்ளார்.
மாவோயிஸ்ட்டுகளின் இந்த தாக்குதலுக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அரசியல் உயர்நிலைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவோயிஸ்டுகளின் வன்முறையை எதிர்கொள்வதில், பாதுகாப்புப் படையினரின் உத்தி போதுமானதாக இல்லை என்பதையே இத்தகைய தாக்குதல்கள் உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உயிரிழந்த பாதுகாப்புப்படையினருக்கு அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இந்த தாக்குதலை நிகழ்த்திய மாவோயிஸ்டுகள் பழிவாங்கப்படுவார்கள் என தெரிவித்தார். அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, பலியான பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினர், தங்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 16 பேர் கொல்லப்ப்ட்டனர்.
0 comments:
Post a Comment