இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சியினை மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை எழும்பூரில், மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இதில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான யஷ்வந்த சின்கா, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கனேசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காந்திய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய யஷ்வந்த் சின்கா, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு துணை நின்றது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் என்று குற்றம்சாட்டினார்.
அந்த இரு கட்சிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது பாவச்செயல் என்று அவர் விமர்சித்தார்.
இலங்கை இனப் படுகொலைக்கு இந்திய கடற்படையும் காரணம் என்று கூறிய யஷ்வந்த் சின்கா, பிரதமர் மன்மோகன் சிங் வெளியுறவுக் கொள்கையை பலவீனமாக கையாள்வதாகவும் குற்றம்சாட்டினார்.
மத்தியில் நிலையான ஆட்சியை கொண்டுவருவதன் மூலம், இலங்கையில் சமநிலையை கொண்டுவர முடியும் என்று அவர் கூறினார்.
0 comments:
Post a Comment