பாதுகாப்பு படையினர் மீதான மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு வீரர்கள் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக , அம்மாநில ஆளுநருக்கு பிரணாப் முகர்ஜி அனுப்பிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மாவோயிஸ்ட்களை எதிர்கொள்வதற்காக சிஆர்பிஎப்-ன் தலைவரை திலீப் திரிவேதியை உடனடியாக சட்டீஸ்கர் செல்லும் படி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
0 comments:
Post a Comment