Home » » வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் கட்சி இன்று ஆலோசனை

வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் கட்சி இன்று ஆலோசனை

Written By Unknown on Thursday, 13 March 2014 | 14:03





தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு பிறகு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் டெல்லி சென்றுள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மீண்டும் போட்டியிட தயக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாக மற்ற கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.






Tamil Nadu and Pondicherry and the Congress candidates to contest the 40 seats in parliament to choose a consultative meeting held in New Delhi today . The party president Sonia Gandhi, who led after the meeting , Tamil Nadu and Puducherry in the list of candidates is expected to be released .   The Tamil Nadu Congress Committee chief nanatecikan , Pondicherry state Congress president AV Subramanian , former Chief Minister Vaithilingam and others have gone to Delhi . The winners competed in the last parliamentary elections kattivaruvat said to be reluctant to compete again . The other parties in the state to form a coalition with the conclusion of the talks fail , the Congress party has decided to contest separately .

0 comments:

Post a Comment

Share This

Powered by Blogger.

Labels