ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மும்பையில் ஆட்டோவிலும், ரயிலிலும் சென்று பிரசாரம் மேற்கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார். உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி அந்தேரி ரயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவருடன் ஆத் ஆத்மி தொண்டர்கள் ரிக்சாக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் பின்தொடர்ந்தனர். கெஜ்ரிவால் பயணம் செய்வதை படம்பிடிக்க ஏராளமான ஆத் ஆத்மியினர் முயன்றனர்.
இதனால், விமான நிலையத்தில் இருந்து அந்தேரி ரயில் நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலை தாண்டி அந்தேரி ரயில் நிலையத்திற்கு கெஜ்ரிவால் சென்றார். அங்கும் தொண்டர்கள் அதிகளவு கூடியிருந்ததால், நெரிசல் ஏற்பட்டது. இதனால், ரயில் நிலையத்தில் இருந்த சோதனை கருவிகளை சிலர் அடித்து நொறுக்கினர். பின்னர் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயிலில் ஏற மறுத்து, டிக்கெட் எடுத்துக் கொண்டு மின்சார ரயிலின் பொதுவகுப்பு பெட்டியில் அர்விந்த் கெஜ்ரிவால் பயணம் செய்தார்.
தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் ரயில் நிலையம் சென்ற அவர், அங்கு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை விளம்பரமா அல்லது எளிமையா என்பது தெரியவில்லை என மும்பை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment