பிரதமர் கனவில் இருக்கும் சிலர், பீகார் குறித்த உண்மையான தகவல்களை தெரிந்திருக்க வேண்டும் என நரேந்திர மோடியை, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.
பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தாம் போராடி வருவதாகவும், சன்மானம் கேட்கவில்லை என்றும் கூறினார். பீகாரி என்பதற்காக பெருமைப்படும் அதே வேளை, கர்வம் கொள்ளவில்லை என்றும் பேசினார். கூட்டணியில் இடம் பெற்றிருந்த போது, பாரதீய ஜனதா கட்சி ஒரு போதும் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரவில்லை என்றும் நிதிஷ் குமார் தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ள நிலையில், எல்லா வகையிலும் பின் தங்கியுள்ள பீகார் மாநிலத்தை, குஜராத்துடன் ஒப்பிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பீகார் தலைநகர் பாட்னா தேர்தல் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment