குஜராத் விவசாயிகளின் உழைப்பையும் அவர்களின் நிலத்தையும் நரேந்திர மோடி அரசு அபகரித்து வருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் பாலசினார் நகரில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.
குஜராத்தில் மோடி தலைமையில் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அவர் விமர்சித்தார். நரேந்திர மோடி அரசு குஜராத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை தொழிற்சாலைகளாக மாற்றி வருவதாகவும், இதை எதிர்க்கும் விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். 2004-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின் குஜராத் மாநிலம் முன்னேறியுள்ளதாக மோடி கூறினாலும், உண்மையில் முன்னேறியது பெரும் செல்வந்தர்கள் மட்டுமே என்றும் ராகுல் விமர்சித்தார்.
0 comments:
Post a Comment